நயன்தாரவாக நடிக்கும் பிரபல நடிகையின் மகள்! இந்த போட்டோவ பாத்தீங்களா?

நயன்தாரா நடிகைகளில் எப்போதும் நம்பர் ஒன் தான். அவருக்கான மார்க்கெட் தனித்துவமானது. நெற்றிகண் படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாகவும் அவர் நடித்து வருகிறார்.

அவரின் திருமணத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் தன் காதலருடன் அவர் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

அவரின் நடிப்பில் கோலமாவு கோகிலா படம் வெற்றி பெற்றது. ரசிகர்கள் மிகவும் விரும்பப்பட்டது. இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். Good Luck Jerry என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். ஜான்வி கபூரின் தோற்றத்தை பாருங்கள்.. புகைப்படம் வெளியாகியுள்ளது.

You might also like