காலையில் வாழைப்பழமும் தயிரும் சாப்பிடக்கூடாது… ஏன் தெரியுமா?

இரவில் சாப்பிடவில்லை எனில், வயிற்றில் ஏதும் இல்லாத காரணத்தினால் காலையில் நாம் எழுந்திருக்கும் பொழுது ஒரு வித வெறுப்பை நாம் உணருகிறோம்.

நமது ம.ன.நி.லை.யை உயர்த்தவும் மேலும் நம்மை ஊக்குவிக்கவும், சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது அவசியம். தவறான உணவு தேர்வுகள் செரிமான கோளாறுகளின் அ.பா.ய.த்.தி.ற்.கு உங்களை தள்ளும்.

நீங்கள் காலை உணவிற்கு தவிர்க்கவேண்டிய சில உணவுகளின் பட்டியல் இதோ.

வாழைப்பழங்கள்
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய மற்றொரு பழம் வாழைப்பழம். இந்த மஞ்சள் பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது, இதனை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் போது ரத்தத்தில் உள்ள இரண்டு தாதுக்களின் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும்.

தயிர்
குடலின் நண்பன் தயிர், இது சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளும் போது செரிமானத்தை ஊக்குவிக்கிறது. தயிரில் காணப்படும் லாக்டிக் அமில பாக்டீரியா அதிக அமிலத்தன்மை கொண்டதால் இதை காலையில் உட்கொள்ளும்போது பயனற்றதாகிவிடும். நன்பகலில் தயிர் சாப்பிடுவது நல்லது.

பச்சை காய்கறிகள்
உங்களது உணவிற்கு சாலடை (salad) சேர்ப்பது நல்லது, ஆனால் அவற்றை அதிகாலையில் தவிர்ப்பது நல்லது.பச்சை காய்கறிகள் அனைத்தும் நார்ச்சத்து நிறைந்தது, இது காலையில் அருந்துவதால் ஜீரணமாக கடுமையாக இருக்கும். பச்சை காய்கறிகளை காலையில் எடுத்துக்கொண்டால் வாயு, வயிறு உபசம், வயிற்று போக்கு இவைகளுக்கு வழிவகுக்கும்.

​சிட்ரிக் பழம்
ஆரஞ்சு மற்றும் தக்காளி போன்ற சிட்ரிக் பழங்கள் வைட்டமின் c நிறைந்தவை, அவை உங்கள் சருமத்திற்கும் நல்லது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ஆனால் இந்த பழங்கள் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிப்பதால் அறியப்படுகிறது. அதிகாலையில் இந்த பழங்களை எடுத்துக்கொள்வதால் எரிச்சல்,நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

காபி
ஒரு சூடான கப் காப்பியுடன் நாளை தொடங்குவது சாதாரண விஷயமாக தெரியலாம், ஆனால் சிலர் அதன் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெறும் வயிற்றில் காப்பி குடிப்பதினால் வயிற்றில் அமில சாறின் உற்பத்தி அதிகரிக்கிறது, இது இரைப்பை அழற்சி பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

சர்க்கரை பானம்
உங்கள் நாளை ஒரு கிளாஸ் ஜூஸுடன் தொடங்குவதை விட சிறந்தது என்ன? ஆனால் உங்களது பாக்கெட் பானம் பெரும்பாலும் சர்க்கரையால் நிரம்பியுள்ளது. காலையில் சர்க்கரை சேர்ந்தவற்றை நாம் உண்பது, நீண்ட நேர ஓய்வுக்கு பிறகு விழித்திருக்கும் உங்கள் கணையத்திற்கு நல்லதில்லை.

You might also like