விஜய்யின் படத்தில் இனி நடிக்க மாட்டேன்.. படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ருதி ஹாசனின் ஷாக்கிங் முடிவு..

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருபவர் உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.

இவர் நடிப்பில் தற்போது தெலுங்கு திரையுலகில் க்ராக் எனும் திரைப்படம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இப்படத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் ஸ்ருதி ஹாசனின் நடிப்பில் தற்போது தமிழில் உருவாகியுள்ள திரைப்படம் லாபம். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் முதன் முதலில் இணைந்து நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

சமீபத்தில் லாபம் படத்தின் படப்பிடிப்பில், தனது ரசிகர்களை சந்தித்த விஜய் சேதுபதி, ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததை பார்த்த நடிகை ஸ்ருதி ஹாசன் உடனடியாக படப்பிடிப்பை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் லாபம் படத்தின் படப்பிடிப்பு மீதம் ஒரு நாள் உள்ள நிலையில், இனி விஜய் சேதுபதி படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று நடிகை ஸ்ருதி ஹாசன் முடிவெடுத்துள்ளாராம்.

இந்த தகவல் தற்போது கோலிவுட் வாட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

You might also like