வவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின் வழமைக்கு திரும்பவுள்ள வவுனியா மாவட்டம்

வவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின் வழமைக்கு திரும்பவுள்ள வவுனியா மாவட்டம்

வவுனியாவில் 500 நபர்களின் பி.சி.ஆர் முடிவுகள் மாத்திரமே காத்திருப்பில் : சில தினங்களில் வழமைக்கு திரும்பவுள்ள வவுனியா மாவட்டம்

வவுனியா மாவட்டத்தில் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் காத்திருப்பில் உள்ள 500 நபர்களின் பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரமே வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை மீண்டும் வழமை நிலமைக்கு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள முடியுமேன வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் நிலமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா நகர் உட்பட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் 156 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் நகரின் சில பகுதிகள் தனிமைப்படுத்தல் அமுல் படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 500 நபர்களின் முடிவுகள் மாத்திரமே காத்திருப்பில் உள்ளமையினால் அவர்களின் முடிவுகளின் அடிப்படையில் ஒர் சில தினங்களில் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை வழமை நிலமைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுமேன அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது வவுனியா மாவட்டத்தில் நகரின் பகுதிகளும் நகரை அண்டிய பகுதிகள் சிலவும் 24ம் திகதி வரை தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like