வவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7 பகுதிகள்

வவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7 பகுதிகள்

வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 7 பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் நீடிக்கும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி திங்கட்கிழமை காலை தொடக்கம் வழமை நிலைக்கு திரும்புவதுடன் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில் ஹோரவப்போத்தானை வீதி , மில் வீதி , சூசைப்பிள்ளையார் குள வீதி , பஜார் வீதி , கந்தசுவாமி கோவில் வீதி , தர்மலிங்கம் வீதி , சந்தை சுற்றுவட்ட வீதி என்பன தொடந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக நீடிக்கும் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

You might also like