கிளிநொச்சியில் 53ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 53ஆவது நாளாக தொடர்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்த வேண்டும், மேலும் தமது பிள்ளைகள் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமக்கான உரிய தீர்வு கிடைக்கும் மட்டும் தமது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like