இலங்கை வாழ் மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புத்தாண்டின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு கொளுத்தும் போது அவதானமாக பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபாவனையை தவிர்த்துக்கொள்ளுமாறும், அவசியமற்ற கருத்து முரண்பாடுகளை தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த காலங்களில் மதுபோதையில் ஏற்பட்ட வாகன விபத்துக்கள், உயிரிழப்புக்கள் மற்றும் பட்டாசு கொளுத்தியதில் ஏற்பட்ட அனர்த்தம் போன்ற சம்பவங்கள் அதிகமானதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like