போராட்டங்களின் முடிவுக்காக காத்திருக்கும் மாவீரன்

முல்லைத்தீவு நகர்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியன் சிலையின் நிர்மாணப்பணிகள் முடிவடைந்திருந்தாலும் இன்றுவரை திரைநீக்கம் செய்யப்படவில்லை.

இதேவேளை இந்த சிலை திரைநீக்கம் செய்யப்படாமை குறித்து மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

மாவீரன் பண்டாரவன்னியனின் சிலையை திரைநீக்கம் செய்யும் சூழல் முல்லைத்தீவில் தற்பொழுது காணப்படவில்லை.

மேலும் முல்லைத்தீவில் பொதுமக்களின் போராட்டங்கள் தீர்வின்றித் தொடர்கின்றது. இதனால் குறித்த சிலையை அடுத்த மாதம் திரைநீக்கம் செய்யத்தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மகாத்மா காந்தியின் சிலையும். மாவீரன் பண்டாரவன்னியனின் சிலையும் முல்லைத்தீவு நகரில் அடுத்த மாதம் திரைநீக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like