தமிழ் புத்தாண்டு ராசிபலன்: கும்ப ராசிக்காரர்களே!! இந்த ஆண்டு குரு பார்வை உங்க மேல தான்!! செம லக்!

அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3

குழந்தை உள்ளம் கொண்ட கும்பராசி அன்பர்களே!குரு பார்வை வந்தாச்சு! குறையெல்லாம் தீர்ந்தாச்சு!

ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 8-ல் இருக்கும் குரு, செப்.1ல் 9ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து 2018 பிப்.13ல் 10ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

ராசிக்கு 7-ம் இடமான சிம்மத்தில் இருக்கும் ராகு ஜீலை 26-ல் 6-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். ராசிக்கு 1-ல் இருக்கும் கேது, ஜீலை 26-ல் 12ம் இடமான மகரத்திற்கு செல்கிறார்.

ராசிக்கு 10ம் இடமான விருச்சிகத்தில் இருக்கும் சனி டிச.18ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகநிலையின் அடிப்படையில் பலனைக் காணலாம்.

ஏப்ரல் 14- ஜீலை 31

குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 5,7,9 பார்வையால் குறையனைத்தும் விலகி நன்மை உண்டாகும். குடும்பத்தேவை நிறைவேறும். பணியாளர்களுக்கு சலுகை கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

பணிச்சுமை கூடும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். போட்டியாளரால் பிரச்சனை தலைதூக்கலாம். புதிய வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.

கலைஞர்களுக்கு விருது, பாராட்டு போன்றவை கைநழுவி போகலாம். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் அக்கறை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.

பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர்.

ஆகஸ்ட் 1-2018 ஜனவரி 31

குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.

உறவினர் உதவிகரமாக செயல்படுவர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர்.

தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். ஆனால், கேதுவால் அவ்வப்போது பணவிரயம் ஏற்படலாம். கலைஞர்கள் எளிதில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க சற்று தாமதமாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகள் வளர்ச்சி பாதையில் செல்வர். வழக்கு விவகார முடிவு திருப்தியளிக்கும். பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். வுருந்து, விழா என சென்று மகிழ்வர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

2018 பிப்ரவரி 1- ஏப்ரல் 13

குடும்பத்தினர் ஆதரவுடன் இருப்பர். ஆடம்பர செலவைத் தவிர்ப்பது நல்லது. சுபநிகழ்ச்சிகள் தடைபடலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம்.

பணியாளார்களுக்கு பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் குருவின் பார்வை பலத்தால் வருமானம் உயரும். புதிய தொழில் முயற்சி ஓரளவு வெற்றி பெறும். கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர்.

அரசியல்வாதிகள் சுமாரான வளர்ச்சி காண்பர். பதவி கிடைப்பது அரிது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

விவசாயிகள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கப் பெறுவர். சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகும். பெண்கள் குடும்ப நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகவும். பயணத்தின் போது கவனம் தேவை.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு. வியாழன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செல்ல வேண்டிய கோவில் சமயபுரம் மாரியம்மன்.

You might also like