தமிழ் அரசியல் பிரமுகரை கொலை செய்ய முயற்சி ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு – கிளிநொச்சி நீதவான்

தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்வதற்கு முயற்சி செய்த சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் ஐந்து பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த ஐந்து பேரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே நீதவான் குறித்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழ் அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக சந்தேகத்தில் கடந்த ஜனவரி மாதம் முன்னாள் போராளிகள் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like