முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன் இருவர் கைது

முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியில் இன்று காலை பெறுமதியான வலம்புரிச்சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலம்புரிச்சங்கினை விற்பனைக்காகக் கொண்டு வந்த நிலையிலேயே வத்தளையினை சேர்ந்த இருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை இடம்பெற்று வருவதாகவும், சந்தேகநபர்களையும், வலம்புரி சங்கினையும் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

வலம்புரிச்சங்கின் பெறுமதி தொடர்பில் மதிப்பிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like