கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சில தனியார் நிறுவனங்கள் குளிரூட்டி வசதிகள் இருப்பதால் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முன்வந்தன.இருப்பினும் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க கூறியுள்ளார்.

இதற்கிடையில் வைரஸுக்கான தடுப்பூசிகளை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவிரும்புகின்றன.எவ்வாறாயினும், இந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை என்று வீரதுங்க கூறியுள்ளார்.

தடுப்பூசிகளின் முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்று லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் செயல்முறைக்கு தலைமை தாங்கும் வீரதுங்க,தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

You might also like