வவுனியாவில் காணாமல் போன உறவுகளுக்கு புத்தாடைகள் வழங்கிய புலம்பெயர் தமிழன்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் நாளையுடன் 50வது நாளை எட்டுகின்றது.

வவுனியா செய்தியாளர் பாஸ்கரன் கதீஷனின் வேண்டுகோளுக்கினங்க கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதி  (  truck driver)  ஜனார்தன்அவர்களினால் காணாமல் போன உறவினர்களுக்கு இன்று (13.04.2017) இருபத்தைந்து புத்தாடைகள் வழங்கப்பட்டது.

நாளை பிறக்கவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் நாங்கள் அனைவரும் புத்தாடைகள் அணியும் போது தமது உறவுகளை தொலைத்து நிற்கும் காணாமல் போன உறவுகளும் புத்தாண்டில் புத்தாடைகள் அணிய வேண்டும் என்ற ஒர் எண்ணத்திலேயே இவ் புத்தாடைகள் வழங்கப்பட்டது.

You might also like