வவுனியாவில் நாளை 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி : முதன்மை பட்டியலில் யார்?

வவுனியாவில் நாளை 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி : முதன்மை பட்டியலில் யார்?

வவுனியாவிலும் நாளை (30.01) முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்திய அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளை (30.01) 300 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. வவுனியா வைத்தியசாலையில் வைத்து இத் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதுடன், சுகாதார துறையினருக்கே முதல் கட்டமாக தடுப்பூசிகள் ஏற்படவுள்ளன.

தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக முதியவர்கள், கர்ப்பிணிகள் எனப் பலருக்கும் இத் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனளர்.

You might also like