தப்பியோடிய கைதி! சிக்கலில் மாட்டிக்கொண்ட பொலிஸார்?

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பி ஓடியதனால் பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாணந்துரை தெற்கு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் தப்பியோடியுள்ளார்.

குறித்த கைதி தப்பியோடும் பொழுது, சிறைச்சாலையில் பெண் பொலிஸ் அதிகாரியொருவரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கடமையில் இருந்துள்ளனர்.

கைதி தப்பியோடும் அளவிற்கு அதிகாரியும், உத்தியோகத்தரும் பொழுது போக்கா இருந்துள்ளனர் என்றும், கடமையில் சரிவர செயற்படவில்லை என்று குறிப்பிட்டு இருவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இதேவேளை இது குறித்த மேலதிக விசாரணைகளை பாணந்துரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like