கர்ப்பிணி தாய்மார்களுக்கு காலாவதியான உணவு பொருட்கள்: மக்கள் விசனம்

மட்டக்களப்பு – வெல்லாவெளியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு காலாவதியான பழுதடைந்த உணவுகள் வழங்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத்திற்கு முரணான வகையில் இருக்கும் உணவு பொருட்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசாங்கத்தால் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தினால் இருபதினாயிரம் ரூபா பெறுமதித்தொகையில் ஒவ்வொரு மாதமும் கருவாடு, தானியங்கள், பால்மா வகைகள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் பழுதடைந்த, புளுப்பிடித்த, காலாவதியான உணவுப்பொருட்கள் பிரதேசத்தில் உள்ள கூட்டுறவுக்கடைகளில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உணவு பொருட்கள் தொடர்பாக வெல்லாவெளி சுகாதார பரிசோதகர் மற்றும் வைத்தியர்கள் இவற்றை பாராமல் வழங்குவது ஏன்? பதவியில் உள்ள அதிகாரிகளே டெங்கு ஒழித்தல் மட்டும் போதாது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

You might also like