குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவசமாக மின்சார இணைப்பை வழங்க நடவடிக்கை!
நிவாரண உதவிகள்
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் சமூர்த்தி பயனாளர்கள் மற்றும் கு.றை.ந்.த வ.ரு.மா.ன.ம் கொண்ட கு.டு.ம்.ப.ங்.க.ளு.க்.கு மின்சார இணைப்புகளை வழங்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதிலொரு கட்டமாக இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்க மின் மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.