சாதனை வருடமாக அமையட்டும் – பாலச்சந்திரன் சிந்துஜன்
பழையதை மறப்போம்…
புதியதை நினைப்போம்…
கோபங்களை துறப்போம்…
சந்தோசங்களை பகிர்வோம்…
எதிரியை மன்னிப்போம்…
நண்பனை நேசிப்போம்…
சொன்னதை செய்வோம்…
செய்வதை சொல்வோம்…
தீயதை விட்டெறிவோம்…
நல்லதை தொடர்வோம்…
2016இற்கு விடை கொடுப்போம்…
2017ஜ வரவேற்போம்………………
இந்த இனிய நாளிலே பகைகளை மறந்து துன்பங்களையும், துயரங்களையும் அகற்றி நல்ல விடயங்களை சிந்திக்கவும், செயற்படுத்தவும் உள்ளத்தில் எண்ணங்கொண்டு எமது சமூகத்தின் விடிவுக்காகவும், மாற்றத்திற்காகவும் அனைவரும் ஒன்றாய் இணைந்து பயனிக்க திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் இந்த ஆண்டு சுபீட்சமானதும், சிறப்பு நிறைந்ததுமான ஆண்டாக அமையவும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழவும் வாழ்த்தி மீண்டும் எனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
உங்களுக்கான சேவையில்,
பாலச்சந்திரன் சிந்துஜன்.
வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச்செயலாளர்,
தலைவர் – கலைமகள் நற்பணி மன்றம் – வவுனியா.