தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ; நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிப்பு

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தை வழங்குவதற்கு இன்று கூடிய வேதன நிர்ணய சபை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 900 ரூபாவும், பாதீட்டு சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்குவதற்கான யோசனையைத் தொழில் ஆணையாளர் முன்வைத்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் தோட்ட முதலாளிமார் சம்மேளத்தின் சார்பில் 08 பேரும், தோட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் 08 பேரும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 03 பேரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதற்கு முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், இந்த வேதன தொகைக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த தொகைக்கு ஆதரவாக 11 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

You might also like