உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் – ஜனாதிபதி கோட்டாபய பணிப்புரை

ஜனாதிபதி கோட்டாபய பணிப்புரை…

கேகாலை மாவட்ட ஆசிரியர் ப ற்றாக்குறையை உடன் நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 06 ஆம் திகதியன்று கேகாலை மாவட்டத்தில் உள்ள தெரணியகல – திக்கெல்லகந்த பகுதியில் நடைபெற்ற ஒன்பதாவது ´கிராமத்துடன் உரையாடல்´ நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

உரையாடலின் போது திக்கெல்லகந்த கனிஷ்ட வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடமொன்றை வழங்கவும், ஆய்வுகூட வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் தோட்டப் பகுதிகளிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் வெற்றிடங்களுக்கு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு வி.சே.ட க.வ.ன.ம் செலுத்தப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள ஆசிரியர்கள் ப ற்றாக்குறையை நீக்குவதற்கும், ஏனைய உட்கட்டமைப்பு வ சதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

You might also like