வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை குழப்ப முயற்சி

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் புதிய பிறக்கும் புத்தாண்டில் கூட தமக்கு தீர்வும் இல்லை நிம்மதியும் இல்லை என தெரிவித்து இன்று (14-04) வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா கந்தசாமி கோவிலில் கடவுளிடம் தங்கள் மனக் கவலைகளை சொல்லி கதறி அழுத பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்களிடம் நபர் ஒருவர் ஏன் மீடியாவுக்கு முன் கடவுளைக் கும்பிடுகிறீர்கள் படம் எடுப்பதற்காக தானே இங்கு வந்தனீர்கள் நேற்று வந்து கும்பிட்டிருக்கலாம்தானே என்ற ரீதியில் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் அந்த நபருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் அந்நபர் அங்கிருந்து வேகமாக அகன்று சென்றிருந்தார்.

ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த பின் உண்ணாவிரதிகளிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்பதற்காக உண்ணாவிரத மேடைக்கு வந்த நபரை காணாமல் போன பிள்ளையின் தாயார் ஒருவர் அந்நபரின் சட்டையை பிடித்து உணக்கு என்னடா மன்னிப்பு! நீ தமிழன் தானேடா? என  கேள்வி கேட்ட சம்பவத்தால் நிலைமை விபரீதமான நிலையில் அங்கிருந்தவர்களால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் அந் நபர் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

 

You might also like