பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!

இலங்கையில் பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை…

பேருந்துகளில் இலத்திரனியல் முறையின் கீழ் புதிய நடைமுறை ஒன்று அமுலுக்கு வரவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்கு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலத்திரனியல் டிக்கட் அட்டை ஒன்றை அறிமுகம் செய்ய தேசிய போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கான செயலி ஒன்றை தயார் செய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ரீலோட் மூலம் பணம் செலுத்தப்படும் இலத்திரனியல் அட்டை மூலம், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு கட்டணம் செலுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like