யாழ்ப்பாண தமிழனுக்கு அடித்த பே ரதிஷ்டம்

யாழ்ப்பாண தமிழனுக்கு அடித்த பே ரதிஷ்டம்..

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த வருடத்துக்கான ஐ பி எல் போட்டியில் தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை வீரர்களின் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞம் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இதன்படி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான விஜயகாந்த் -வியஸ்காந்த் என்பவரின் பெயரே இந்தப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

31 இலங்கை வீரர்கள் பதிவு செய்த போதிலும் அவர்களில் 9 வீரர்களே இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர்களின் விபரம் வருமாறு,

குசல் பெரேரா,திஸார பெரேரா, கெவின் கொத்திகொட,மகேஷ் தீக்சன,விஜயகாந்த் வியஷ்காந்த்,துஷ்மந்த சமீர,வனின்ந்து ஹசரங்க,டசுன் சானக மற்றும் இசுறு உதான

You might also like