புதிய கோவிட் காரணமாக விரைவில் முழுமையாக முடக்கப்படவுள்ள இலங்கை : பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

விரைவில் முழுமையாக முடக்கப்படவுள்ள இலங்கை : பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

புதிய மாறுபாடு காரணமாக கோவிட் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதையும் முடக்குவதற்கு எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கொரோனா தொற்றினை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் நாளை கூடும் போது இந்த பிரச்சினை தொடர்பில் விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் முழு நாட்டையும் முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்ககப்படவில்லை. எனினும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் நாளை இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வார இறுதி ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தொற்று நோய் பிரிவு நிலைமை தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும், எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொது சுகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த தெரிவித்துள்ளார்.

You might also like