வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் மினி சூறாவளி : ஏ9 வீதியில் போக்குவத்து தடை
வவுனியா ஈரப்பெரிய குளம் பகுதியில் சற்று முன்னர் பலத்த மழை பெய்துள்ளதுடன், மினி சூறாவளி தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வீதியோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஏ9 வீதியில் பாரிய மரம் ஒன்று விழுந்துள்ளதாகவும், இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில், இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.