வவுனியா கண்டி வீீதியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து

வவுனியா கண்டி வீீதியில்

வவுனியா கண்டி வீீதியில் வன்னி இராணுவ தலமையகத்திற்கு அருகே நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து கண்டி வீதியுடாக தென்பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிலொன்று வீதியின் மறுபக்கம் மாற முற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கில் வீதியின் மறுபக்கம் மாறுவதினை அவதானித்த மோட்டார் சைக்கிலின் பின் தொடர்ந்து வந்த கயர்ஸ் வாகனமும் பாரவூர்தியும் தரித்து நின்றுள்ளது.

இதன் போது பாரவூர்தியின் பின் தொடர்ந்து வந்த பட்டா ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து பாரவூர்த்தியின் பின்பகுதியில் மோதியதுடன் பாரவூர்த்தி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கயர்ஸ் வாகனத்துடன் மோதுண்டதுடன் கயர்ஸ் வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துச் சம்பவம் நேர்த்துள்ளது.

இவ் விபத்தில் பட்டா ரக வாகனம் , பாரவூர்தி , கயர்ஸ் , மோட்டார் சைக்கில் ஆகிய நான்கு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இவ் விபத்துச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like