தமிழ் புத்தாண்டு ராசிபலன்: சிம்மம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

மகம், பூரம், உத்திரம் 1

வெற்றி சிகரத்தை குறிக்கோளாக கொண்ட சிம்மராசி அன்பர்களே!

வளர்ச்சி வந்தாச்சு! வசந்தம் பிறந்தாச்சு!

ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 2-ம் இடமான கன்னியில் உள்ள குரு, செப்.1ல் 3ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இங்கிருந்து அவர் 2018 பிப்.13ல் 4ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

ராசியில் உள்ள ராகு, ஜீலை 26-ல் இடம் மாறி 12ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். 7-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, ஜீலை 26-ல் 6ம் இடமான மகரத்திற்கு மாறுகிறார்.

தற்போது 4-ம் இடத்தில் இருக்கும் சனி, டிச.18ல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.

ஏப்ரல் 14-ஜீலை 31

குருவால் பொருளாதாரம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன் – மனைவி இடையே அன்பு நிலைக்கும்.

வாழ்வில் வசந்தம் வீசும் வளர்ச்சியான காலகட்டமாக அமையும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதிகள் கிடைக்கும். திருமணம் சுப நிகழ்ச்சிகள் விரைவில் கைகூடும். பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும்.

விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆனால் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவர். மாணவர்கள் சிறப்பான பலனை காணலாம். கல்வியில் சிறப்பு கிடைக்கும். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர்.

சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும்.

ஆகஸ்ட் 1-2018 ஜனவரி 31

பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். பணியாளார்களுக்கு பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு.

அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில். வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு வகையில் சலுகை எதிர்பார்க்க முடியாது. பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வளர்ச்சி பெறும்.

கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள் கவுரவத்திற்காக பணம் செலவழிப்பர்.

மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும். விவசாயிகள் நிலக்கடலை, கிழங்கு வகைகளில் நல்ல மகசூல் காண்பர்.

கைவிட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு பாடுபடுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

2018 பிப்ரவரி1 – ஏப்ரல் 13

குடும்பத்திற்கு தேவையான வசதி கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

உறவினர் வகையில் பிரச்சனை உருவாகலாம். சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உண்டாகும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்காது. அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி தாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவுரை பயன் உள்ளதாக அமையும்.

விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் காண்பர். பெண்கள் கணவரிடம் விட்டு கொடுத்து போகவும்.

பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு. பவுர்ணமியன்று கிரிவலம். செல்ல வேண்டிய கோவில் திருக்கடையூர் அபிராமி அம்மன்

You might also like