தமிழ் புத்தாண்டு ராசிபலன்: கன்னி ராசிக்காரர்களின் கவனத்திற்கு

கன்னி

உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2

கடமையை உயிராக மதித்து நடக்கும் கன்னி ராசி அன்பர்களே!

புன்னகை மலரும் புதுவாழ்வு கிடைக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் இருக்கும் குரு பகவான், செப்.1ல் 2-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து அவர் 2018 பிப்.13ல் 3-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

உங்கள் ராசிக்கு 12-ம் இடமான சிம்மத்தில் இருக்கும் ராகு, ஜீலை 26ல் 5ம் இடமான மகரத்திற்கு வருகிறார்.

ராசிக்கு 3-ல் உள்ள சனி, டிச.18ல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகநிலையின் அடிப்படையில் பலனைக் காணலாம்.

ஏப்ரல் 14-ஜீலை 1

பணப்புழக்கம் சீராக இருக்கும் புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெற்றிப் புன்னகையுடன் புதுவாழ்வு அமையப் பெறூவீர்கள்.

விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். குருவின் பார்வை பலத்தால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய வீடு கட்ட வாய்ப்புண்டு.

சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். பணியாளர்கள் கடந்த காலத்தை விட முன்னேற்றம் காண்பர். பணிச்சுமையைச் சந்தித்தாலும் அதற்கான பலன் கிடைக்கும்.

வழக்கமான சம்பள உயர்வு, சலுகை கிடைப்பதில் தடை இருக்காது. தொழில், வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய தொழிலில் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற, சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கப் பெறுவர். பெண்களுக்கு பிள்ளைகள் வழியில் சந்தோஷம் உண்டாகும்.

ஆகஸ்ட் 1- 2018 ஜனவரி 31

குருபலத்தால் மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் அதிகரிக்கும். பெண்களால் நன்மை உண்டாகும்.

முயற்சியில் இருந்த தடை விலகும். ஆடம்பர வசதி மேம்படும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.

உறவினரால் உதவி கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கலாம். பணியாளர்கள் திறமையை வெளிப்படுத்தி முன்னேறுவர்.

தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை மேம்படும். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர்.

அரசியல்வாதிகள் மேம்பாகு அடைவர். மாணவர்கள் தேக்க நிலை மாறி வளர்ச்சி காண்பர். சிலருக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயிகள் நவீன இயந்திரம் மூலம் பணியை மேம்படுத்துவர். புதிய சொத்து வாங்கலாம். பெண்கள் குடும்பதாரின் நன்மதிப்பை பெறுவர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

2018-பிப்ரவரி 1- ஏப்ரல் 13

குடும்பத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும்.

பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறுக்கிடலாம். செலவு அதிகரித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வருமானம் வரும்.

கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். அரசியல்வாதிகள் அடிக்கடி பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கு.

விவசாயிகள் சீரான விளைச்சல் காண்பர். குறிப்பாக நெல், சோளம் போன்ற பயிர்கள் மூலம் அதிக வருமானம் காணலாம். பெண்கள், உறவினர் வகையில் விட்டு கொடுத்து போவது நல்லது.

பரிகாரம்: பவிர்ணமியன்று அம்மன் வழிபாடு. வெள்ளி கிழமையன்று காளியம்மனுக்கு எலுமிச்சை தீபம். செல்லவேண்டிய கோவில் விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர்.

You might also like