தமிழ் புத்தாண்டு ராசிபலன்: துலாம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3

தன்னலம் கருதாமல் பிறருக்கு உதவும் துலாம் ராசி அன்பர்களே!

காலம் கனிஞ்சாச்சு! கல்யாண ஊர்வலத்துக்கு!

உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கன்னியில் இருக்கும் குரு செப்.1ல் உங்கள் ராசிக்கு மாறுகிறார். அங்கிருந்து அவர் 2018 பிப்.13ல் விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

11ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு ஜீலை 26-ல் 10- இடமான கடகத்திற்கு மாறுகிறார். ராசிக்கு 5-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, ஜீலை 26-ல் 4-ம் இடமான மகரத்திற்கு வருகிறார்.

சனிபகவான் ராசிக்கு 2-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து டிச.18-ல் தனுசு ராசிக்கு மாறுகிறார்.

ஏப்ரல் 14- ஜீலை 31

குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு அடிக்கடி காரசாரமாக நடக்கும். பிள்ளைகள் வழியில் சுபச்செலவு அதிகரிக்கும்.

கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும்.

பண விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. கலைஞர்கள் விடாமுயற்சியால் ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.

மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியரின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது. விவசாயிகளுக்கு கரும்பு, எள், பயறுவகை மற்றும் பனை பொருட்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.

பெண்கள் வீண்விவாதத்தில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

ஆகஸ்ட் 1-2018 ஜனவரி 31

குருவின் பார்வையால் குடும்பத்தில் நன்மை பெருகும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பணியாளர்களுக்கு கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க நேரிடும்.

மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே வளர்ச்சி காண முடியும். விவசாயிகள் உழைப்புக்கேற்ப பலன் கிடைக்கப்பெறுவர்.

பணப்பயிர்களில் முதலீடு செய்ய வேண்டாம். வழக்கு, விவகாரம் சுமாராக இருக்கும். பெண்கள் குழந்தைகளுக்காக பாடுபட வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.

2018 பிப்ரவரி 1- ஏப்ரல் 13

பொருளாதார வளம் சிறக்கும். வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. கணவன் மனைவி இடையே அன்பு மேம்படும்.

சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பணியாளர்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கப்பெறுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியான போக்கு காணப்படும். லாபம் அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு எளிதில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர் மத்தியில் செல்வாக்கு உயரும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர்.

சிலர் படிப்பு, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வர். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.

புதிய நிலம் வாங்க வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரத்தில் சுமூகத்தீர்வு கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

பரிகாரம்: சதுர்த்தியன்று விநாயகர், ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செல்லவேண்டிய கோவில் காஞ்சி காமாட்சி அம்மன்.

You might also like