சிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்

சிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்

ஜெனீவா விவகாரம் தொடர்பில் வடக்கு கிழக்கு சிவில் சமூக பிரதிநிகள், மதகுருமார், தமிழ் தேசிய அரசியல் கட்சி பிரதிநிதிகள், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோணியார் ஆலய மண்டபத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது நடைபெற்று வரும் ஜெனீவா அமர்வு தொடர்பாகவும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பாகவும், தமிழ் தேசிய பேரவையின் உருவாக்கம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படுகின்றது.

இக் கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஈபிஆர்எல்எப் சார்பில் சுரேஸ்பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வேலன் சுமாமிகள், திருகோணமலை ஆயர் நோயல் இமானூவேல், மான்னார் ஆயர் இமானுவேல் பர்ணாண்டோ, யாழ்மறைவாட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம்தென்கையிலை ஆதினம் குருமுதல்வர் அகஸ்தியர்அடிகளார், திருமூலர் தம்பிரான் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You might also like