வவுனியா பூந்தோட்டம் வீதியில் முச்சக்கரவண்டி விபத்து

வவுனியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று முன் சில்லு உடைந்து விபத்திற்குள்ளான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சேதமடைந்த முச்சக்கர வண்டி எதிரில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதிய போதிலும் கூட சாரதி சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like