முகக்கவசம் அணியாது வெளியில் சென்றால் உங்களுக்கு இந்த நிலமை ஏற்பட நேரிடும் : பொலிஸார் எச்சரிக்கை

முகக்கவசம் அணியாது வெளியில் சென்றால் உங்களுக்கு இந்த நிலமை ஏற்பட நேரிடும் : பொலிஸார் எச்சரிக்கை

முகக்கவசம் அணியத்தவறுவோருக்கு பொலிஸார் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக கொழும்பில் முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு எதிராக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சில இடங்களில் மக்கள் ஒன்றுகூடும் போது முகக்கவசம் அணியப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார விதிகளைப் பின்பற்றத் தவறும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

You might also like