சந்திரனுக்கு இலவசமாக செல்லலாம் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு : பதிவுகளுக்கு முந்துங்கள் : விபரம் உள்ளே

ஜப்பானிய கோடீஸ்வரர் ஒருவர், தன்னுடன் 8 பேரை இலவசமாக சந்திரனைச் சுற்றிவருவதற்கு அழைத்துச் செல்லப் போவதாக அறிவித்துள்ளார்.

இப்பயணித்தில் இணைந்துகொள்வதற்கு விண்ணப்பிக்குமாறு உலகெங்குமுள்ள மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுசாகு மெஸாவா (Yusaku Maezawa ) எனும் ஜப்பானிய கோடீஸ்வரரே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.விண்ணப்ப விபரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஜப்பானிய கோடீஸ்வரர் யுசாகு மெஸாவா AFP Photo

அமெரிக்க தொழிலதிபர் இலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விண்கலம் 2023 ஆம் ஆண்டு சந்திரனைச் சுற்றிவருவதற்குத் செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா நிறுவனம் மேற்கொண்ட பயணத்தின் பின்னர் சந்திரனுக்கு மனிதர்கள் செல்லும் முதல் விண்வெளிப் பயணமாக இது அமையும் எனக் கருதப்படுகிறது.

இப்பயணத்துக்கான முதலவாது பயணியாக 2018 ஆம் ஆண்டு யுசாகு மெஸாவா பெயரிடப்பட்டார். இதற்காக அவர் செலுத்தும் பணம் எவ்வளவு வெளியிடப்படவில்லை. எனினும் அது பெருந்தொகை என ஸ்பேஸ் எக்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி இலோன் மஸ்க் கூறினார்.

இந்நிலையில் இப்பயணத்தில் இணைந்து கொள்ள 8 பேர் வரலாம் என யுசாகு மெஸாவா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் ஸ்தாபகர் இலோன் மஸ்க், ஜப்பானிய கோடீஸ்வரர் யுசாகு மெஸாவா AFP Photo

இப்பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் அதனால், இப்பயணத்தில் தன்னுடன் இணைந்துகொள்பவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்துக்கு டியர்மூன் (Dear Moon) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘அனைத்து வகை பின்னணிகளையும் சேர்ந்தவர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன’; என டுவிட்டர் வீடியோ ஒன்றின் மூலம் யுசாகு மெஸாவா தெரிவித்துள்ளார்.

இதில் இணைந்துகொள்ள விரும்புவர்கள் இரு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

‘ஏனைய மக்களுக்கும் சமூகத்துக்கும் ஏதேனும் வழியில் உதவுவதற்காக அவர்கள் செய்யும் எந்த நடவடிக்கையையும் மேம்படுத்த வேண்டும். பயணத்தில் இணையும், இது போன்ற ஆசைகளைக் கொண்ட ஏனையோருக்கு உதவ வேண்டும் ஆகியனவே அந்நிபந்தனைகளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://dearmoon.earth எனும் தளத்தின் மூலம் 2021 மார்ச் 14 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம், முதற்கட்ட தெரிவு செயற்பாடுகள் மார்ச் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என யுசாகு மெஸாவா தெரிவித்துள்ளார்.

You might also like