கொழும்பு – முல்லேரியா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கோவிட் தொற்றுக்கு இலக்கான நபர்

கொழும்பு – முல்லேரியா வைத்தியசாலையில் சி.கிச்சை பெற்று வந்த கோவிட் தொற்றுக்கு இலக்கான நபரொருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

21 வயதான இளைஞரொருவரே நேற்றிரவு அந்த வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இளைஞர் திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற இளைஞரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இலங்கையில் இதுவரையில் 85,695 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ள அதேவேளை 502 கோவிட் ம.ரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 82,059 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

You might also like