க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் இல் நடைபெறாது

க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் இல் நடைபெறாது

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஸ’ம் தொழிநுட்பத்தின் மூலம் அனைத்து மாகாணப் பணிப்பாளர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படாமல் பாடத்திட்டம் பூர்த்தி செய்யப்படாமல் ஓகஸ்ட் இல் பரீட்சையை நடாத்துவது நியாயமில்லை என கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகளை மீண்டும் தொடங்குவதற்கான திகதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சனத் பூஜித தெரிவித்தார்.

You might also like