நாட்டில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தா.க்.க.ம் கட்டுப்படுத்தப்பட்டு வரும் சூழலில் ஏனைய தனிப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை தளர்த்துவதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

டொலர் தொடர்பான பிரச்சினையே தற்போது ஏற்பட்டுள்ளது.இதனால் இறக்குமதியினை கட்டுப்படுத்தி ஏற்றுமதியினை அதிகரிப்பதற்கு இயலுமானவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தடுப்பூசிகள் செலுத்துவதற்கான வசதிகள் போதியளவு கிடைக்கப்பெற்று கொவிட் 19 தொற்று கட்டுப்படுத்தப்பட்டால் வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டை வந்தடைவர்.

அதன் பின்னர் அமெரிக்க டொலருக்கான ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும்.எனவே, அதுவரையில் அபிவிருத்தி பணிகளுக்கான வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

You might also like