வெளிநாடு சென்று இலங்கை திரும்பியவர்களுக்கு புதிய சுகாதார வழிக்காட்டல்கள் வெளியீடு

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களுக்காக புதிய சுகாதார வழிக்காட்டல்கள் பலவற்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் புதிய சுகாதார வழிக்காட்டல்கள் பலவற்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.விசேடமாக கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டு இலங்கை வரும் இலங்கையர்களை தங்கள் வீட்டில் தனிமைப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் கால எல்லை தொடர்பிலும் நாட்டிற்குள் வரும் போது பின்பற்ற வேண்டிய முறை தொடர்பிலும் புதிய வழிக்காட்டல்கள் உள்ளக்கடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இருந்து சிறிய காலப்பகுதிக்கு வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிக்காட்டல்களையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சுகாதார வழிக்காட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

விசேடமாக அரச பயணம், உத்தியோகபூர்வ பயணம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வெளிநாடு சென்றவர்கள் மீண்டும் இலங்கை திரும்பிய பின்னர் வீடுகளில் தனிமைப்பட வேண்டும். அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை முடிவுகளுக்கமைய அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

96 நாட்களுக்கு மேல் வெளிநாட்டு பணம் மேற்கொண்டு நாடு திரும்பும் நபர்கள் 96 மணித்தியாலங்களுக்குள் பெற்ற PCR முடிவுகள் அல்லது 48 மணித்தியாலத்திற்கு பெற்றுக் கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

வீடுகளில் தனிமைப்படும் காலப்பகுதியான 5 – 7 நாட்களுக்கு எடுக்கப்படும் PCR பரிசோதனை முடிவுகளுக்கமைய தனிமைப்படுத்தலை நிறைவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like