இலங்கையிலும் பரவியுள்ள புதிய வகை கொரோனா – பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை

இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ள தென்னாபிரிக்காவில் பரவும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ், தீ.விரமாக பரவக்கூடிய இயல்பை கொண்டதாகும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசி இந்த உருதிரிபடைந்த வைரஸிற்கு எதிராக எவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடர்பில் உலகலாவிய ஆய்வாளர்கள் இதுவரை உரிய முறையில் தகவல்களை வெளியிப்படுத்தவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் உப்புல் ரோஹண தெரிவித்துள்ளன.
இந்த தடுப்பூசிகள், தென்னாபிரிக்காவில் பரவும் வீரியமிக்க உரு திரிபடைந்த வைரஸிற்கு எதிராக சிறந்த முறையில் பயன்தராவிடின் நாம் தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மாத்திரமே இதற்கான தீர்வாக அமையாது என்றும் எனவே மீண்டும் சுகாதார வழிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை க.டுமையாக பின்பற்றியே இந்த பரவலை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட புதியவகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் சந்திம ஜீவசுந்தர தெரிவித்தார்.
தன்சானியாவில் இருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று, உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.