வவுனியா ஒமந்தையில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா

வவுனியா ஒமந்தை வேப்பங்குளத்தில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா இன்று (15.04.2017) காலை 10.30மணியளவில் ரி.ஆர்.ரி இன் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திருமதி சிவசக்தி அருந்ததி தலமையில் நடைபெற்றது.

சுமார் எட்டு லட்சம் ரூபாவில் கட்டப்பட்ட இவ் பெரியம்மா முன்பள்ளியினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் வைபவ ரீதியாக திறந்து வைத்து மக்களின் பாவனைக்கு கையளித்தார்.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா, இந்திரராஜா, ஒமந்தை கிராம சேவையாளர் அனுஜா, வவுனியா வடக்கு முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் இராஜேஸ்வரன், வேப்பங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் கருணாநிதி மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முன்பள்ளி மாணவர்களுக்கு அப்பியாசப்புத்தங்கள் வழங்கப்பட்டதுடன் ஞாபகார்த்தமாக முன்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.

You might also like