கு.டிபோ.தையில் வாகனம் செலுத்திய சாரதியால் குடும்பஸ்தர் ப.லி

அதுகிரிய பகுதியின் ஒருவல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உ.யிரிழந்துள்ளார்.

கு.டிபோ.தையில் பிழையான பக்கத்தில் வண்டியை செலுத்திய நிலையில், முன்னாள் வந்த லொரியுடன் மோதுவதை தடுக்க முயன்ற போதே சாலையோரம் சென்ற நபர் மீது மோதி இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த சம்பவம் அருகில் இருந்த சி.சி.டிவி யில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், விபத்து ஏற்பட்டவுடன் விபத்தை ஏற்படுத்திய சாரதியே விபத்துக்குள்ளான நபரை ஒருவல வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

சம்பவத்தில் ப.லியானவர் 49 வயதான ஐந்து குழந்தைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், விபத்தை ஏற்படுத்திய சாரதி ம.து போ.தையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like