சொந்த வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

நாட்டிலுள்ள மத்தியதர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் புதிய குடியிருப்பு தொகுதிகள் அமைக்கப்படவுள்ளதாக கிராமப்புற வீடமைப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

100 குடியிருப்புகள் கொண்ட வீடுகளை கட்டுவதற்கான வீட்டுவசதி திட்டத்தை ஆரம்பிக்க அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் ஒரு வீட்டு திட்டம் நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்ஜித் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் மாடி வீட்டு தொகுதியில் 2 அறைகள் கொண்ட 650 சதுர அடியிலான வீடு ஒன்று 6.9 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். மதிப்பீட்டிற்கமைய 3அறைகள் கொண்ட வீடு ஒன்று 9 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

நூற்றுக்கு 24 வீதமான பணத்தை முதலில் செலுத்தி வீடு ஒன்றை ஒதுக்கிக் கொள்ள முடியும். மீதி பணத்தை மாதாந்த அடிப்படையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக நூற்றுக்கு 6.25 வட்டியின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

You might also like