வவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற கு.ற்றச்சாட்டில் தாய் கைது

வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற கு.ற்றச்சாட்டில் தாய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் 36 பெண்ணே கடந்த திங்கட்கிழமை குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். பின்னர் குழந்தையை தான் வசிக்கும் காணியில் கிடங்கு வெ.ட்.டி பு.தை.த்.து.ள்ளார்.

குறித்த பெண்ணின் நடவடிக்கைகளில் ச.ந்தேகம் கொண்ட ஒருவர், கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில், பொலிஸாரின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

தான் குழந்தையைப் பிரசவிக்கவில்லை என தாய் தெரிவித்த நிலையில் அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து ப.ரிசோதித்தபோது அவரே குழந்தையை பிரசவித்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் தாயாரை பொலிஸார் ச.ந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

You might also like