தொலைபேசி பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் தொலைபேசி இலக்கத்தை மாற்றம் செய்யாமல் தொலைதொடர்பு சேவை வழங்குனரை மாற்றுவதற்கான வாய்ப்பை பாவனையாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இத்திட்டத்தை செயற்படுத்த, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பாவனையாளர்களின் தேவையின் அடிப்படையில் தொலைபேசியில் பயன்படுத்தும் சிம் அட்டையை மாற்றம் செய்யாமல் தொலைதொடர்பு சேவை வழங்குனரை மாற்றம் செய்வதற்காக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

You might also like