காணிக்கு விண்ணப்பித்தவருக்கு வெளியாகிய முக்கிய அறிவித்தல் : பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்

காணி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் எதிர்கால தொழிலதிபர்கள் கவனத்துக்கு
இப்பதிவை கொண்டு சேருங்கள்.மாதிரி திட்டச் சுருக்கம் – 1 ஏக்கர் நிலத்தில் நெல்,தென்னை,தேக்கு காணிக்குள் முருங்கை,கீரை வகை பயிர்ச்செய்கை கோழி,ஆடு,தேனீ வளர்ப்பு,மண்புழு உரம் 100,000 காணித்துண்டுகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு புள்ளித்திட்டமிடலின் அடிப்படையிலேயே பயனாளிகள் தெரிவுசெய்யப்படவுள்ளதாக பகிரப்படுகிறது

சில குழுக்களில் பகிரப்பட்ட எதிர்பார்க்கப்படும் விடையங்கள் மற்றும் அவற்றுக்கான தோராயமான புள்ளிகளாக கருதப்படுவதாக தெரியவந்த விடையங்கள் ஆகியவற்றை எல்லோரும் பயன்பெறும் வண்ணம் பகிர்கிறோம். இதில் சில மாற்றங்களும் இருக்கலாம். ஆனால் பொதுவாக இவ்வாறான விடையங்கள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது.

ஆக நேர்முகத்தேர்வுக்கு தயாராகும் போது பின்வரும் விடையங்களை கருத்தில் கொள்ளுங்கள்!நேர்முக தேர்வில் உங்கள் ஆளுமையை நிரூபியுங்கள்.. உங்களுக்குள் நிரம்ப திறமை.. திட்டங்கள் இருக்கு.. அதிகம் குழப்பாமல் தெளிவாக இது தான் என் திட்டம், இதன் முலம் நான் முன்னேறுவேன் என அழுத்தமாக நினைத்து முயற்சி எடுப்போம்…!!

காணி நேர்முகத்தேர்வும் புள்ளியிடல் மதிப்பீடும்:தேசிய அடையாள அட்டை (NIC) கொண்டு செல்ல வேண்டும்
கிராமசேவகர் இடம் பெற்ற வதிவிட சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.சமாதான நீதவானிடம் (JP) பெற்ற – உங்களிடம் பயிர்ச்செய்கைக்கான காணி இல்லை என்ற சான்று உறுதிப்படுத்த வேண்டும்.உங்களது கருத்திட்டம் எது தொடர்பானது என கூறவேண்டும் (விவசாயம், உற்பத்தி, தொழிற்சாலை)

பின்வரும் புள்ளியிடல் திட்டத்தை கவனத்தில்கொள்க.உங்களுடைய வயது 18 – 45 எனின் – 15 புள்ளிகள். உங்களுக்கு தொழில் தொடர்பான அறிவு காணப்பட்டால் – 10 புள்ளிகள்.செய்முறை பயிற்சி அல்லது முன்அனுபவம் காணப்பட்டால் – 10 புள்ளிகள்.கருத்திட்ட முன்மொழிவு Project Proposal சமர்ப்பிக்கப்படல் மற்றும் அதன் உள்ளடக்கம் பற்றி கூறக் கூடியதாக இருந்தால் – 15 புள்ளிகள்.ஐந்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய கருத்திட்டம் ஆயின் – 10 புள்ளிகள்

தொழில் முயற்சியின் இயல்பின் அடிப்படையில் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்கு – 5 புள்ளிகள். இறக்குமதிக்கு மாற்றீடான உற்பத்தியாயின் – 5 புள்ளிகள்.புதிய தொழில்நுட்பம் முயற்சியின் – 5 புள்ளிகள். புதிய கண்டுபிடிப்பு அல்லது செயலற்ற வளங்களை பயன்படுத்தினால் – 5 புள்ளிகளும் வழங்கப்படும்.

முதலீடு தொடர்பாக விண்ணப்பதாரரின் நிதி மூலமாயின் 5 புள்ளிகளும் .பௌதிக வளம் அல்லது வாகனம் / இயந்திரம் / உபகரணம் / கட்டடம் என்பனவற்றிற்கு 5 புள்ளிகளும் வழங்கப்படும். சந்தை வாய்ப்புக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.ஏனைய விடயங்களில் குறைந்த வருமானம் மற்றும் ஆற்றலுடைய விண்ணப்பதாரரின் 3 புள்ளிகளும் ஆக்க உரிமை அல்லது படைப்பாற்றல் அல்லது தரச்சான்றிதழ் உடைய விண்ணப்பதாரரின் 3 புள்ளிகளும் வழங்கப்படும்.

இதை வேறு சில குழுக்களில் எமக்கு பகிர்ந்த நண்பர்களுக்கும் நன்றி!நேர்முகத்தேர்வுகளை பொறுப்புடன் கையாளும் அதிகாரிகள்/ உத்தியோகத்தர்களுக்கும், தங்களை நன்கு தயார்ப்படுத்தி நேர்முகத்தேர்வை கையாள முயலும் அத்தனை இளம் தொழில் முனைவர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்!!திருநாவுக்கரசு தயந்தன்
13.03.2021

You might also like