அரிசியினை பதுக்கினால் இதான் நடக்குமாம் : அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அரிசியினை பதுக்கினால் இதான் நடக்குமாம் : அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அரிசி ஆலை உரிமையாளர் அல்லது உற்பத்தியாளர் அல்லாத ஒரு இடைத்தரகரிடம் அரிசி கையிருப்பில் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தால் குறித்த அரிசி பங்குகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

இது தொடர்பான உறுதியாக தகவல்கள் இருப்பின் நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவித்த அமைச்சர், அவ்வாறு பதுக்கு வைத்திருக்கப்படும் அரிசி பங்குகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.

ஜா-எல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ச.தோ.ச. விற்பனை நிலைய திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

You might also like