வவுனியாவில் 51வது நாளாகவும் தொடரும் போராட்டம் : சிவசக்தி ஆனந்தன் விஜயம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 51 ஆவது நாளாகவும் இன்று (15.04.2017) தொடர்கிறது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போராட்ட இடத்திற்கு இன்று (15.04.2017) மதியம் 12.30மணியளவில் விஜயம் மேற்கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் உறவுகளுடன் கலந்துரையாடினார்.

You might also like