பதுளை விபத்தில் உயிரிழந்த சிலரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

இன்று காலை இடம்பெற்ற பதுளை – பசறை விபத்தில் 9 ஆண்களும், 6 பெண்களும் ப.லியாகியுள்ளதுடன் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவும் 9 பேருக்கு சத்திரசிகிச்சை வழங்கப்பட்டு வரவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இவ்விபத்தில் உ.யிரிழந்தவர்களள் சிலரின் புபை்படங்கள் வெளியாகியுள்ளன.

மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியரும் லுணுகலை இராமகிருஷ்ணா மகா வித்தியாலய முன்னாள் மாணவனுமான பெருமாள் முரளிதரன் என்பவரும் உ.யிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை டேனி எனும் புகைப்படக் கலைஞரும் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் ம.ரணித்தவர்களில் ஒருவரின் சடலம் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் ம.ரணித்தவர்களில் 13 பேரின் ச.ரீரங்கள் பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரின் சரீரம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனைகளுக்காக சரீரங்களில் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன் அவற்றின் முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ம.ரண பரிசோதனைகளுக்காக பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள ச.ரீரங்களை பதுளை வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like