கு.டிபோ.தையில் வாகனம் செலுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

கு.டிபோ.தையில் வாகனம் செலுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய தினம் முதல் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு மோட்டார் போக்குவரத்து பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த விடயம் குறித்து இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கவனயீனமாக வாகனம் செலுத்துவோர் மற்றும் கு.டிபோ.தையில் வாகனம் செலுத்துவோரை கண்டுப்பிடித்து தண்டனை விதிக்கும் நோக்கில் இந்த விசேட சோதனை நடாத்தப்பட உள்ளது.

கு.டிபோ.தையில் வாகனம் செலுத்துவோரை கண்டுப்பிடிப்பதற்கான கருவிகள் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக புத்தாண்டு காலப் பகுதியில் கூடுதலான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like