இலங்கை மக்களை உலுக்கிய பேரூந்து விபத்து : கண்ணீருக்கு மத்தியில் உடல்கள் நல்லடக்கம்

இலங்கை மக்களை உலுக்கிய பேரூந்து விபத்து : கண்ணீருக்கு மத்தியில் உடல்கள் நல்லடக்கம்

முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய பசறை, 13ஆம் கட்டை கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து பசறை – லுணுகலை நகரங்கள் முழுவதும் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டு அனுதாபம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் மரண பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இரு முஸ்லிம் ஜனாஸாக்கள் நேற்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டன.

அத்துடன் கத்தோலிக்கர்களான கணவன், மனைவி மற்றும் புகைப்படக் கலைஞர் டேனி என்பவரின் உடல்களும் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டன.

ஏனைய ஒன்பது பேரின் உடல்களும் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.

You might also like