கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலயத்தினை மீட்கும் போராட்டத்தில் மக்கள் : சுழற்சி முறையில் ஆரம்பம்

கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலயத்தினை மீட்கும் போராட்டத்தில் மக்கள் : சுழற்சி முறையில் ஆரம்பம்

கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுழற்சி முறை போராட்டமொன்று இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் குறித்த அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே இன்று காலை குறித்த வளாகத்தில் எதிர்ப்பு தெரிவித்து சுழற்சிமுறையிலான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மத தலைவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like